வனங்களில் இருந்து தான் வளர்ந்து வந்தது மனிதவளர்ச்சி என்றும் குரங்கிலிருந்துதான் மனிதன் கூர்ப்படைந்தான் என்கிறது விஞ்ஞானம். விஞ்ஞானம் சொல்ல முன்மே இந்து மெஞ்ஞானம் சொன்னது. மனிதர் மட்டுமல்ல உலகின் உயிரினமே ஊர்ந்துதான் நடந்தது என்று. அதற்கு விஸ்ணுவின் 10 அவதாரங்களும் சாட்சி. மப்சம்>கூர்மம் என ஊர்ந்து பின் வராகம் வாமனம் என நகர்ந்தது உயிர்கள். ஊர்ந்த குரங்கு நகரங்கிய போது நாகரீகம் வளர்ச்சி பெற்றது. ஊர்ந்த மனிதன் ஒன்றார் கூடி ஊரானான். பட்டி பட்டியாய் பட்டணமாகி பின் நகர்ந்து நாகரீகமாகி நகரானான். இந்நகரின் ஒருநகராம் காரைநகரின் கலைச்செல்வி நடராஜா தம்பதியினரின் புதல்வி செல்வி தர்சிகா நடராஜா தான் கால்பதித்த கலையை கால்து}க்கி ஆடும் சிவனுக்கும்> இக்கலையைக் காணவந்திருக்கும் உங்களுக்கும் சமர்பிக்க விருக்கிறார். அவரைக் காரைநகர் மக்கள் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றேன்.
அசைவு என்ற ஒன்று உயிர்களிடையே இருந்த காலம் தொட்டு ஆடல் என்பதும் இருந்தது. ஆடலும் அசைவே. காற்றின் இசைக்கு கார்முகில் இசைந்து அசைகிறது. தென்றலுக்கு தென்னைங் கீற்றுகள் இசைந்து அசையும். ஆதலால் உயிர்களுடன் ஒன்றியது ஆடல். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் மனங்களின் மார்க்கமாகவும் ஆடல்களும் பாடல்களும் இருந்தன. தெருக்கூத்துக்களாய்> கோலாட்டம் கும்பியடிகளாய்> ஆலயங்களில் ஆத்மாக்கள் இலயிக்க வைக்கும் கலையான இந்தப் பரதக்கலை பின் அரசர்களையும் கனவான்களையும் பிரபுக்களையும் மகிழ்விக்கும் கலையாகி பணத்துக்கு ஆடும் கலையாகவும் கண்வழி கருத்துப் போகும் கலையாக மாற்றம் பெற்றது. தவறிப்போதலைத் தடுப்பதற்காக அந்த ஆர்ப்மார்த்தமான இன்பக்கலையை ஆண்டவனுக்குச் சமர்ப்பித்து பரதக்கலையை கட்டமைத்த ஒழுங்குபடுத்தி அமைத்தவர்தான் பரதமுனிவர். இந்த அழகியற்கலையை அதிகமாகப் பெண்கள்கள் தான் பயில்கின்றார்கள்.
ஆடலை ஆண்டவன் ஆடவன் என்பதால் தான் ஆண்களை ஆடவர் என்றனர். இந்தக் பரதக்கலையில் ஆண்களின் ஆடல் தாண்டவமாகவும் பெண்களின் ஆடல் வடிவம் லாக்கியமாகவும் வகுக்கப்பட்டுள்ளது. தாண்டவம் வீரம் வேகம் பலம் பராக்கிரமம் என ஆண்மையைப் பிரதிபலிப்பதாகவும். இலாக்கியம் என்பது பெண்மையைப் பிரதிபலிக்கம் அன்பு பாசம் மெல்மை நளினம் எப்பவற்றைச் சித்தரிப்பதாகவும் வகுக்கப்பட்டது. ஊழித்தீ என்னும் உலகப்பிரளத்தில் சிவனால் ஆடப்படுவது உக்கிர தாண்டவம்.
இந்தப்பரதக்கலை முக்கியமாக இந்து ஆலயங்களில் ஆடப்பட்டு ஆண்டவனாகிய சிவனுக்குச் சமர்பணமாக்கப்பட்டு வந்தது. இக்கலையின் இலட்சனைகள் முத்திரைகளைப் பார்த்தோமானால் எல்லாமே இந்துக்கடவுக்களின் சிலைகளில் இருப்பதைக்காணலாம். ஆடல்கலை உலகமக்களுக்கும் சகலஜீவராசிகளுக்கும் சொந்தமானது என்றாலும் பரதக்கலை சைவர்களுக்கும் சிவனுக்குமே சொந்தமானது. இப்படியான சைவத்தையும் தமிழையும் தன்னகத்தோ கொண்ட மிளிர்ந்திருக்கும் காரைநகரம்பதியின் தம்பதிகளின் தர்சிகா நடராஜாவின் புதல்வியின் பரத அரங்கேற்றத்திற்கு காரை மக்கள் சார்பாக என்னை அழைத்தது எனக்குப் பெருமை சேர்க்கிறது.
சைவமும் தமிழும் இருகண்ணெனக் கொண்ட காரைநகர் பல சிறந்த பக்தர்களாலும்> சித்தர்களாலும் பாட்டப்பட்டது. திருமூலரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிய எமது காரைநகர். மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் திருக்கோவில் நிறைவமைப்புக் இசைய அமைக்கப்பட்ட ஆலயங்கள் காணுமிடமெங்கும் கண்ணிறைந்திருக்கும். ஆடற்கலையின் அரசனான சிவனுக்குத் தலம் அமைத்து சிவநெறியையே வாழ்வாகக் கொண்ட எம்புண்ணிய பூமியின் புதல்வி தன் அடிச்சுவட்டைக் காவிவந்த எமக்குக் காட்சிப்படுத்துவது ஊர்மக்களுக்கு உவகை சேர்க்கிறது.
கலை கலாச்சார புதிய பழைய விழுமியங்களை இன்றும் காவி நிற்கும் எம்ஊர் தவப்பலத்திலும் சிறந்து நின்றது. கற்பிழந்தாள் தன்மனைவி என்பதற்காகக் தன்மனையாள் அகலிகையை கல்லாய் சபித்த துர்வாசமுனிவர் தவம் செய்த பூமியைதான் எம்பூமி காரையம்பதி. பொதிகைத் தென்றலாய் தமிழை காவிவந்த அகத்தியர் வந்து தவம் செய்த பூமியும் எம்பூமியே. இத்தவத்தின் பலனும் செல்வி... யின் தாய்தந்தையரின் தவப்பலனும் செல்வியின் கலைத்தவமும் ஒன்று கூடி பரத அரங்கேற்றமாய் உருப்பெற்றிருக்கிறது. சிவன் கலையில்லாமல் சிவபூமியா? புகழும் பெருமையும் சுமந்து வருகிறாய் எம்மாதர் குலமாணிக்கம் செல்வி தர்சிகா நடராஜா
நடராஜரின் அர்பணமாய் சொரூபமாய் விளங்கும் பரதக்கலையை பயின்று சபையில் சமர்பித்து எம்மை மகிழ்விப்பது எம்மண்ணுக்கு மட்டுமல்ல எம்ஊருக்கும் பெருமை சேர்க்கிறது. இந்த சைவக்கலையை யாரோ எல்லாம் இன்று பயில்கின்றனர். சிவபக்தியும் ஆத்மபலனுமின்றி பயிலும் இக்கலை வெறும் வியாபாரமாக இருக்குமே தவிர கலைக்கான மகத்துவத்தை அது தேடித்தராது. கலையில் பக்திவேண்டும் அப்பக்தியில் ஊன் உயிர் உயிர்ப்பு இருத்தல் வேண்டும். இவை எதுவுமின்றி ஆட்டமும் பாட்டமுமாய் இருப்பது டிக்கோவிற்குப் போய் ஆடிவிட்டு வருவது போன்றதே.
பக்தியுடன் சேர்ந்த எம்பரதக்கலைக்கு மாசு படுத்துமாறும் அதை அசுத்தப்படுத்துமாறும் அதைக் கற்றவர்களே நடந்த கொள்வது தவிர்க்கப்படவேண்டும். வேற்று மொழி> மதத்தவர்கள் எம்கலையைப் பயில்வது பெருமைக்குரியதே. ஆனால் இப்புனிதக்கலையை பக்தி> புனிதம்> உண்மை> வரலாறு என்பவற்றைத் திரிக்காது உள்ளசுத்தியுடன் பயில்வதுவே இந்தப் புனிதக்கலைக்கு மக்கள் செய்யும் மரியாதையாகும். தமிழினத்தைச் சார்ந்த வேற்று மதத்தவர்கள் பரதம் பயின்று அரங்கேற்றம் வேளையில் பரத்தின் தலைவனான சிவனை வைக்கவே சிவபூசை செய்யவோ மறக்கிறார்கள். சிவனின் கலைவேண்டும் சிவனை வேண்டாம் என்றால் எப்படி. தாயின் பால்வேண்டும் தாய்வேண்டாம் என்பது போலல்லவா அமைகிறது. இக்கலையை அப்படியே அடிப்படைமாறாது அதன் புனித்துவத்துடன் பயில்வதும்> பின்பட்டங்கள் பெற்றபின் புதுமைகளைச் சேர்ப்பதும் இக்கலைக்கு இதைப்பயின்றவர்கள் செய்யும் நன்றி கடனாகும்.
வேற்று மதத்தவர்கள் இந்துக்களைப்போல் கும்பம் வைப்பார்கள். திருநீறு வைக்க மாட்டார்கள். அரங்கேற்றத்தில் சிவபூசை செய்ய மறுக்கின்றனர் சரி நிறைகுடம் கும்பம் என்றால் என்ன? எதற்கா இதை வைக்கிறோம் என்று அறியவும் முயல்வதில்லை. அரங்கேற்றத்தில் சிவன்>சிவபூசை>கும்பம்>திருநீறு என்பன முக்கிய இடத்தைப் பெறுகிறது. நிறைகுடம் நிறைவையும் நீர் து}ய்மைப்படுத்தலையும் அதாவது உலகிலுள்ள திரவங்களுள் அதிகமானவற்று துப்பரவு செய்யக் கூடியது தண்ணீர் என்பதனால்தான் தண்ணீர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்னீர் எப்பாத்திரத்தைக் கொண்டதோ அவ்வடிவத்தை எழுக்கக் கூடியது அதாவது உலகவழக்குடன் இசைந்து வாழுதலைக் குறிக்கிறது. கும்பத்தில் மேலே இருக்கம் தேங்காய் முக்கண் உடையது. இது சிவனின் முக்கண்ணையும் முடி சிவனின் சடாடியையும் குறிக்கிறது. சிவசின்னம் திருநீறு இதைத்தவிர்த்து நிறைகுடம் வைப்பது வேடிக்கையாக இல்லையா? கும்பத்தில் அடியில் நெல்லை ஏன்வைக்கிறார்கள் என்றால் ஆணவம் கன்மம் மாயை எனும் உமியுடன் கூடிய நெல்லாகத்தான் மனிதன் இருக்கிறான். சிவசிந்தனை எம்தலையில் ஏறும் போது இம்மும்மல உமிகள் உடைக்கப்பட்டு நல்ல அரிசி உணவாகும். இதைவிட உயரிய தத்துவத்தை எந்த இனம் மதம் சுட்டிக்காட்டியது சொல்லுங்கள். இப்படி எம்மத்திலும் மதம்சார் கலைகளிலும் தத்துவங்கள்; அற்ற எதுவுமே இல்லை. அர்த்தபுஸ்டியான இக்கலையையும் எம்சமய பண்பாட்டுப் பொக்கிசங்களையும் பேணிக்காக்கும் முகமாகவே எம்கலைகள் பயிற்றுவிக்கப்படவேண்டும்.
கலை கலைக்காக என்று இருந்த காலம் உண்டு. இக்கலை வசதிபடைத்தவர்களுக்கும் கலைவிற்பனர்களுக்கும் கிடைக்கும் கலையாகவே இருந்தது. அக்காலப்பகுதியில் அக்கலைகளைப் பயின்றவர்கள் மட்டுமே இரசிக்கமாறு இக்கலை வடிவங்கள் இருந்தன. இன்று இனைவருக்கும் கிடைக்குமாறு கலைவடிவங்கள் மாற்றப்பட்டுள்ளது. இம்மாற்றங்கள் இக்கலையை அடிப்படை மாறாது வளர்ப்பதாக அமைய வேண்டுமே அன்றி குலைப்பதாக அமையக் கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள். கலை கலைக்காக என்று இருந்த காலம் போய் கலை மக்களுக்காக என்று ஆகியுள்ளது. இந்த இலகு இயல்பு நிலையை நாம் மக்களின் மேன்மைக்கும் புனிதத்துவம் மாறாத மனித உயர்வுக்கும் பயன் படுத்துவோமாக.
கலை கலையாக இருக்கவேண்டுமே தவிர கலையில் கொலையாக இல்லாது> பாதத்து}க்கியாடும் இப்பரதக்கலையை சிவனுக்கு சமர்பித்து பக்தி சிரத்தையுடன் பயிலும் கலையே கலை. இக்கலையில் காட்டப்படும் ஒவ்வோரு முத்திரையும் உடல் உயிர் ஆத்மா எனும் மூன்றுடன் இறைசங்கர்ப்பத்தை காட்டுவதாகவே அமைகிறது. பரதவல்லுணர்கள் இதை நன்குணர்வார்கள். காட்சிகளை உணர்வுகளை காட்டும் முத்திரைகள் அக்காட்சிகளின் படிமவங்களைக் காட்டும். இயற்கையையும் இறைமையையும் ஒன்றாக இணைத்தது இந்து மதமே இந்த இந்துவின் சிவனை வணங்கும் சைவத்தில் இருந்து வந்த பரதம் உடற்பயிற்சியையும் உள்ளப்பயிற்சியையும் கொடுக்கிறது. இதைவிட ஆரோக்கியம் எங்கே எந்த மருத்துவத்தில் இருக்க முடியும்? ஆடல் உடற்பயிற்சி என்றால் இந்த ஆடலைத்தந்து சிவவணக்கம் பக்தி உள்ள உயிர்பயிற்சியல்லவா. பக்தியில்லாக் கலை சித்தி பெறாது.
மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக எந்த மதமுமே தந்திராக விஞ்ஞான பூர்வமான பலவிடயங்களை மக்களுக்கு தந்து நிற்கிறது. சுத்தமான வாழ்வுக்காக இந்துக்கலாச்சாரம். உடல் உள்ளப்பயிற்சிக்கு யோகாசம்: பக்திக்கு சரியை கிரியை யோகம் ஞானம் எனும் வழிமுறைகள்: கலைக்கும் இன்பத்துக்குமாய் பரதம். காதுக்கினிய பக்தியுடன் கூடிய கீதங்களாக சாகித்திய சங்கீதம். மனவடக்கத்துக்கு தியானம் என மனிதவாழ்வியலை மேம்படுத்தி நிற்கிறது இந்துச் சைவம். இனியாவது உயரின் உயர்நிலைச் செல்வமான எமது மதத்தையும் பண்பாட்டு விழுமியங்களாக நாம் காவிவரும் பரதக்கலையையும் மாறுபடாது காக்க முன்நின்று உழைப்பது எமது கடமை மட்டுமல்ல இன்று அரங்கம் காணும் காரைநகர் நர்த்தகி செல்வி தர்சிகா நடராசா போன்றவர்களின் உயரிய கடமையாகும்.
எமது முற்றத்து மல்லிகை (தாய் பெயர்) பெற்றவள்
இன்றய விண்தாரகை வணங்கும் நட்ச்த்திர தேவதை!
எமக்கு ஒளி தரும் நாளைய சூரியன் அவள்!
எமது நர்த்தகி தர்சிகா நடராஜா!
இந்திய கண்டத்தில் பரதம் கர்நாடகம் கற்றோர் சிறந்த விற்பன்னர்களாகி இந்தியமே பேறுபெற்றது.!!!!
எமது நர்த்தகி தர்சிகாவும் எதிர்கால பிரபல டாக்டர் எமக்கும் எமது உலகுக்கும் சேவை தருவாள்!
வாழ்த்துவோம்
நர்த்தகி நன்றாக வாழ்ந்திட!
நர்த்தகி செழித்து வளர்ந்திட!
நர்த்தகி மிளிர்ந்து ஒளிந்திட!
உலகுக்கு ஒளிதரும் நர்த்தகி தர்சிகா!
வாழ்க நர்த்தகி தர்சிகா நடராஜா!
வணக்கம்.
இது காரைநகர் மக்கள் சார்பில் த சோதிலிங்கத்தால் எழுதப்பட்டது
Friday, 3 December 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment